நல்லவேளை தப்பிச்சீங்க..! நான் மட்டும் அசெம்பிளிக்கு வந்தேன்னா..! சீமான் காட்டம்..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாத நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெற்ற தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இந்தக் கூட்டம் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்புடைய நிகழ்வாக இருந்தது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது முதல் முக்கிய பொதுப் பேச்சுகளில் ஒன்றாக இது அமைந்தது. அவரது பேச்சு தேர்தல் தோல்வியை ஒரு புதிய தொடக்கமாகக் கருதி, கட்சியை மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்த வேண்டும் என்பதாக இருந்தது. "இதுவரை நடந்த அனைத்தையும் அழித்துவிட்டு இன்றிலிருந்து அனைத்தையும் புதிதாகத் தொடங்குவோம்" என்று கூறிய சீமான், மே 18, 2026-ஐ நாம் தமிழர் கட்சியின் புதிய தொடக்க நாளாக அறிவித்தார்.
ஜூன் மாதம் முதல் மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து, கட்சியை விரிவுபடுத்தி இன விடுதலையை இலக்காகக் கொண்டு செயல்படப் போவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "நல்ல வேளை என்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள்.
இதையும் படிங்க: சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!
நல்வாய்ப்பாக தப்பித்துவிட்டீர்கள், ஐந்தாரு பேரோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தேன் என்றால் எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பீர்கள்." என்றார். சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தால் அங்கு பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், தற்போதைய அதிகாரிகள் அல்லது எதிர்த் தரப்பினர் வெளியே நிற்க நேரிடும் என்றும் ஒரு வலுவான எச்சரிக்கையின் வெளிப்பாடாக அமைந்தது.
இதையும் படிங்க: “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!