திராவிடம் எங்கே இருக்கிறது..? இப்படி பேசியவர் தான் திருமா... இப்ப என்னமோ..! சீமான் காட்டம்...!
திராவிடம் எங்கே இருக்கிறது என்று பேசியவர் திருமாவளவன் என சீமான் கூறினார்.
தமிழக அரசியல் களத்தில் திருமாவளவன் மற்றும் சீமான் இடையே நாளுக்கு நாள் வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. தமிழக அரசியல் களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான வார்த்தை மோதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்வை முன்னிட்டு அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதலின் தொடக்கப் புள்ளி டிசம்பர் 2025 இறுதியில் திருமாவளவன் பேசிய கருத்துகளிலிருந்து உருவானது. மதுரையில் நடந்த ஒரு போராட்டத்தில் பேசிய திருமாவளவன், நாம் தமிழர் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் மறைமுகமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு உதவி செய்கின்றன என்று குற்றம்சாட்டினார். குறிப்பாக, “விஜயும் சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்” என்று கடுமையாக விமர்சித்தார். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து சீமான் மௌனம் சாதிப்பதாகவும், பெரியார் கொள்கையை எதிர்ப்பது சனாதன சக்திகளுக்கு துணை போவதாகவும் அவர் கூறினார். இது தமிழ் தேசியவாதம் என்ற போர்வையில் சனாதன அரசியலை முன்னெடுப்பதாக திருமாவளவன் விமர்சித்தார்.
இதற்கிடையில், திருமாவளவன் குறித்து சீமான் விமர்சித்து பேசியுள்ளார். திருமாவளவன் தேவைக்கு ஏற்ப மாற்றி பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டுக்கு முன்னர் திருமாவளவன் பேசியதை கேட்டு பாருங்கள் என்று கூறியுள்ளார். திராவிடம் எங்கே இருக்கிறது என கேட்டவர் திருமாவளவன் என்று சீமான் கூறினார். திராவிடத்திற்கு எதிராக திருமாவளவன் பேசியபோது முன் வரிசையில் இருந்து கேட்டவன் நான் என்று கூறினார். சீமான் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என திருமாவளவன் பேசியதை தொடர்ந்து வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: பொருட்செலவை வைத்து திரைக்கலையை மதிப்பிடுவதா? சல்லியர்கள் படத்திற்கு சீமான் ஆதரவு...!
எல்லா இடங்களிலும் ஹிந்தி இருப்பதாகவும், ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் போடுவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது இந்தி தெரியாத போடா என்பதாகவும், ஆளுங்கட்சியானவுடன் அமைதி காப்பதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது GO BACK MODI… ஆளுங்கட்சி ஆனதும் WELCOME MODI என்று கூறுவதாகவும் சாடினார்.
இதையும் படிங்க: தலைமுறைகளை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்... வாட்டி வதைக்காதீர்கள்... சீமான் கண்டனம்...!