×
 

நெருங்கும் தேர்தல்... பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? பளீச் பதிலளித்த சேகர்பாபு..!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு ஆண்டாக மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி துர்கா ஸ்டாலினால் தொடங்கப்பட்ட அன்னம் தரும் அமுதக் கரங்கள் இன்றுடன் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் சந்திரயோகி சமாதி சாலையில் பசி தீர்க்கும் எண்ணம், பரிந்தூட்டும் உள்ளம் என்ற தலைப்பில் 365 ஆவது நாளாக நடைபெற்ற 

அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து 365 நாள் அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு உழைத்த கழக நிர்வாகிகளை சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துர்கா ஸ்டாலின் திமுக நிர்வாகிகள் 145 பேருக்கு பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டம் மூலம் மக்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டதாகவும் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி இந்தாண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் அமுத கரங்கள் போன்று ஒரு திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார். வடசென்னையில் பலர் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசப்பட்டது சம்பந்தமாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று தமிழக வெற்றி கழகத்தினருக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: ஆமாம்சாமியை வச்சுக்கிட்டு டப்பா எஞ்சின்..!! E.D. யை ஒரு கை பாத்துடுவோம்...!! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!

விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றார் தமிழ்நாடு முதலமைச்சரை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு, பதவி வெறி பிடித்துப் போய் சட்டமன்ற உறுப்பினராக கூட சட்டமன்றத்தின் உள்ளே நுழைவோமா என்ற பயத்தில் தெருவோரத்திலிருந்து குரைக்கும் ஒரு பிராணி போல் எடப்பாடி பழனிச்சாமி கத்திக் கொண்டிருக்கிறார் என கூறினார்.

இதையும் படிங்க: திடீர் மாற்றம்..!! திமுக - மநீம உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! பிப்.27ல் நடக்கும் என அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share