×
 

ஆதாரும் ஆவணம் தான்! விண்ணப்பியுங்கள்... SIR விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆதார் அட்டை கொண்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 2025-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் மற்றும் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு குறித்து கடந்த சில மாதங்களாக பரவலான கவனம் பெற்று வருகிறது. இந்த வழக்கு, இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பொருட்டு சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இந்தத் திருத்த நடவடிக்கையின் மூலம், வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமல் தயாரிக்கவும், இறப்பு, இடம்பெயர்வு போன்ற காரணங்களால் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, பட்டியலில் உள்ள பெயர்களைச் சரிபார்ப்பது மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செயல்முறையில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற ஆவணங்களைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் கவனமாக அணுகியது, குறிப்பாக ஆதார் அட்டையை குடியுரிமை அல்லது வசிப்பிட ஆவணமாக ஏற்க மறுத்தது.ஆனால், இந்த சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பல்வேறு அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், இந்தப் பட்டியலை தேர்தல் பூத் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு முன்பு காட்சிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!

இந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஆதார் அட்டையை கொண்டு விண்ணப்பிக்கலாம் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் மட்டுமல்லாமல் ஆதார் அட்டையை கொண்டும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அறியும் வகையில் ஆதார ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் ஆதாருடன் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கேட்பதால் விண்ணப்பிப்பதில் சிக்கல் என எதிர் தரப்பினர் வாதிட்டனர். 11 ஆவணங்கள் இல்லாதவர்களிடம் ஆதார் அட்டை பெற்று வாக்காளர்களை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share