என்ன நடக்குது சீர்காழியில்?... கடைவீதியில் அடுத்தடுத்து 4 பெட்ரோல் குண்டுகள் வீச்சு.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...!
சீர்காழி அருகே தென்பாதி கடைவீதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய 5 மர்ம நபர்கள் காரில் தப்பி ஓட்டம்
சீர்காழி அருகே தென்பாதி கடைவீதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய 5 மர்ம நபர்கள் காரில் தப்பி ஓட்டம்
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை தடயம் இல்லாமல் பாட்டில்களை கூட்டி அள்ளிச் சென்ற போலீசாரால் பொதுமக்கள் அதிர்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி பிரதான சாலையில் அடுத்தடுத்து வீசப்பட்ட நான்கு பெட்ரோல் குண்டுகள். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர் பொதுமக்கள் விரட்டிய நிலையில் தப்பி ஓடி தலைமறைவு.
இதையும் படிங்க: "இன்றே தீர்ப்பு"..! இடைத்தேர்தல் முடிவும்... தகுதி நீக்க வழக்கும்.! பரபரப்பு அரசியல் களம்..!!
தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஹார்டு டிஸ்க்களுடன் பறிமுதல் செய்ததுடன், சாலையில் பெட்ரோல் குண்டு வீச்சில் சிதறி கிடந்த பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துகள்களையும் முழுமையாக தெரியாத அளவிற்கு கைப்பற்றி சென்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அச்சமடைந்த அப்பகுதி வணிகர்கள் உடனடியாக தங்களது கடைகளை அடைத்து சென்றனர் இதனால் சாலை பொதுமக்கள் நடமாட்டம் என்று வெறுச்சோடியதால் பரபரப்பு
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.! தாராபுரத்தில் அதிமுக முன்னிலை..! பின்னுக்கு தள்ளப்பட்ட தவெக, திமுக.!!