100 நாள் வேலை திட்டத்தையே நாங்க ஏற்கல... பல்லாங்குழியும், தாயக்கட்டையும் தான் நடக்குது... சீமான் விமர்சனம்...!
100 நாள் வேலை திட்டத்தையே நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்று அழைக்கப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார். இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் என்று அவர் பலமுறை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
இதற்கான முக்கிய காரணமாக அவர் சுட்டிக்காட்டுவது, இத்திட்டம் தமிழ்நாட்டின் விவசாயத்தை கடுமையாகப் பாதித்துள்ளது என்பதே.சீமான் கூறுவதன்படி, 100 நாள் வேலைத் திட்டம் அறிமுகமான பிறகு, கிராமப்புற தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்கு வர தயங்குகின்றனர். அரசு உத்தரவாதமாக வேலை மற்றும் ஊதியம் தருவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் பணியாற்ற தொழிலாளர்களை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகிவிட்டது. இதனால் விவசாய உற்பத்தி குறைந்து, உணவுப் பொருள்களின் விலை உயர்வு, விவசாயிகளின் இக்கட்டான நிலை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் வாதிடுகிறார்.
குறிப்பாக, தமிழ் சமூகமும் விவசாயமும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், இத்திட்டம் மனித உழைப்பை வீணடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் அவர் இதை வலியுறுத்தி, “விவசாயத்தை வாழவைக்க வேண்டுமானால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாடு நாம் தமிழர் கட்சியின் கொள்கை ரீதியானதாகவே கருதப்படுகிறது. கட்சி ஆதரவாளர்களும் இதை பரப்புரையில் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பஸ்களில் தமிழ்நாடு அரசு -னு எழுத என்ன தயக்கம்? மை தீர்ந்து போச்சா? சீமான் சரமாரி கேள்வி..!
தற்போது 100 நாள் வேலை திட்டத்தின் நிதி குறைப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் தமிழகத்தில் தலை தூக்கி உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் 100 நாள் வேலைத்திட்ட மாற்றங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் 100 நாள் வேலை திட்டத்தையே தாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்தார். தாயகட்டையும் பல்லாங்குழி ஆட்டமும் தான் அங்கு நடப்பதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: போராடும் செவிலியர்கள்.. ஒடுக்கும் காவல்துறை... இதெல்லாம் நியாயமா? சீமான் கண்டனம்..!