×
 

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து... தொழிலாளி உடல் சிதறி பலியான சோகம்..!!

சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து சம்பவத்தில் தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்த நிலையில் இரு பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதனை அடுத்து மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் உரிமையாளரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான நடேஷ் பட்டாசு தொழிற் சாலையின் 20- அறைகளில் சுமார் 60- ஆண், பெண் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசு மூலப் பொருள் அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. மற்றும் இரண்டு அறைகள் சேதமடைந்தன. சம்பவமறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் குருநாதன் என்ற தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பானுப்பிரியா, பூமாரி ஆகிய இரண்டு பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தாலி கட்றதுக்குள்ள இவ்ளோ அக்கப்போரா? கல்யாண மண்டபத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..! பதற்றம்...!!

விஸ்வநத்தத்தைச் சேர்ந்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிவகாசி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதை அடுத்து அவர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாகி உள்ள பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சங்கரை தொடர்ந்து போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாகர்கோவிலில் துணிகரம்... 137 சவரன் நகையை ஆட்டையை போட்ட பலே கில்லாடிகள் !! துருவி துருவி விசாரணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share