×
 

நெருங்கும் சூரசம்ஹாரம்... முழுவீச்சில் திருச்செந்தூர் கடற்கரை தயார் செய்யும் பணிகள்...!

சூரசம்கார நிகழ்ச்சிக்காக திருச்செந்தூர் கடற்கரை தயார் செய்யும் பணிகள் நடைபெற்ற வருகிறது.

கடல் அலைகளின் இசையுடன் கலந்து, வானத்தைத் தாண்டி எதிரொலிக்கும் அரோகரா அரோகரா என்ற முழக்கங்கள், திருச்செந்தூரின் கரையோரத்தில் ஒரு தெய்வீக உணர்வைத் தோன்றுவிக்கின்றன. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடாகத் திகழும் இந்தத் தலம், சூரசம்ஹார நிகழ்வின் மூலம் உலகப் பிரசித்தியைப் பெற்றுள்ளது. இது வெறும் விழா அல்ல. அது நல்லது கெட்டதை வெல்வதன் அழியாத சின்னம். 

சூரசம்ஹார நாளன்று, அதிகாலையில் கோயில் நடைத் திறக்கப்பட்டு, மாலை 4:30 மணிக்கு ஜெயந்திநாதர் என்று அழைக்கப்படும் முருகர், சேவல் கொடியுடன் கடற்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு, அரக்கர்களான ஆனைமுக சூரன், சிங்கமுகன், பனுமுகன், சூரபத்மன் கொண்டு வரப்பட்டு, முருகரின் வேல் அவர்களை வதம் செய்வது போல் அமைக்கப்படுகிறது. விண்ணைப் பிளந்து, கடலைத் தாண்டி எதிரொலிக்கும் அரோகரா முழக்கங்கள், பக்தர்களின் பரவசத்தைத் தூண்டுகின்றன.

இந்நிகழ்வுக்குப் பின், அடுத்த நாள் தெய்வானை முருகரின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது, இது வீரத்திற்குப் பின் அமைதியின் சின்னமாகத் திகழ்கிறது. இந்த 12 நாட்கள் விழா, திருச்செந்தூரை ஒரு தெய்வீகக் களமாக மாற்றுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் நீராடி, விரதம் முடித்து, அருளைப் பெறுகின்றனர்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் பயங்கரம்... இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை... மக்கள் அச்சம்...!

கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் கடற்கரை தயார் செய்யப்பட்டு வருகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக திருச்செந்தூர் கடற்கரையை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் 3,400 தெருக்களுக்கு பெயர் மாற்றம்... மாநகராட்சி அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share