×
 

திருச்செந்தூரில் பயங்கரம்... இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை... மக்கள் அச்சம்...!

திருச்செந்தூரில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முன்னோடியாக அறியப்படும் மாநிலமாக இருந்தாலும், சமீப நாட்களில் நிகழும் கொலை சம்பவங்கள் சமூகத்தின் ஆழமான காயங்களை வெளிப்படுத்துகின்றன. செப்டம்பர் 2025 மாதத்தின் முதல் பகுதியில் மட்டுமே, காதல் தொடர்பான ஆணவ கொலைகள், குடும்பப் பிரச்சினைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என பல்வேறு வடிவங்களில் கொலைகள் பதிவாகியுள்ளன. இவை வெறும் தனிநபர் சம்பவங்களாக மட்டுமல்லாமல், சாதி, பாலியல், போதைப்பொருள் போன்ற சமூக பிரச்சினைகளின் பிரதிபலிப்புகளாகவும் உள்ளன. இந்தக் கொலை சம்பவங்கள், தமிழ்நாட்டின் சமூக நீதி கனவை சவால் விடுகின்றன. 

திருச்செந்தூரில் 30 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபரால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ஆந்தலைப் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன். இவர் தோப்பூர் விளக்கு அருகே சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், இளைஞர் மணிகண்டன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதத்தின் காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING ஓசூரில் பரபரப்பு... தவாக நிர்வாகி ஓட, ஓட வெட்டிக்கொலை... திடுக்கிடும் பின்னணி...! 

உயிரிழந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் அதிரடி.. இரு தந்தை, இரு மகன்களுக்கு ஆயுள் தண்டனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share