×
 

டிடிவி OUT.. வேலுமணி IN..! பியூஷ் கோயலை சந்திக்க படையெடுக்கும் கூட்டணி கட்சிகள்..!

பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை எஸ்.பி வேலுமணி சந்தித்துள்ளார்.

விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் டிடிவி தினகரன் கூட்டணி அமைக்க இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பவர்களோடு தான் கூட்டணி என்று கூறி வந்தார் டிடிவி தினகரன். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக டிடிவி தினகரன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்க மாட்டோம் என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் டிடிவி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நல்லாட்சி கொடுப்பதற்காக மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தால் இபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமி உடன் ஆலோசனை நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திப்பதற்காக எஸ். பி வேலுமணி சென்றுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள பியூஷ் கோயலை எஸ். பி வேலுமணி சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: வாங்க..! சரித்திர வெற்றி படைப்போம்...! இபிஎஸ்க்கு நன்றி சொன்ன TTV தினகரன்..!

மீண்டும் ஏன்டிஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன் பியூஷ் கோயலை சந்திப்பு வாழ்த்து பெற்ற நிலையில் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். எஸ். பி வேலுமணி பியூஷ் கோயலை சந்தித்துள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் இன்னும் எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யாத நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத் பியூஷ் கோயலை சந்திப்பதற்காக சென்றுள்ளார். 

இதையும் படிங்க: மீண்டும் அமமுக - பாஜக கூட்டணி..! பியூஷ் கோயலுடன் TTV தினகரன் சந்திப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share