×
 

இந்திய எல்லைக்குள் புகுந்து அடாவடி; தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறல்!

இந்திய எல்லைக்குள்ளேயே நுழைந்து மீனவர்களின் வலைகளை பறித்து இலங்கைப்படை அத்துமீறி இருக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டம் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில், அதேபகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலுக்கு  மீன் பிடிக்க சென்றுள்ளனர். இது ஒரு மீன்பிடி தடை காலம் என்றாலும் ஃபைபர் படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். 

இந்த சூழ்நிலையில கோடியக்கரை தென்கிழக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் இவர்களுடைய படகின் மீது மோதி அச்சுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையின் ரோந்து படகு மூலம் சேதப்படுத்தியுள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள வலைகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, அவர்கள் மீன்பிடிக்க வைத்திருந்த  பிடித்த மீன்கள் அதேபோல வாக்கிடெக்கி உள்ளிட்ட அவர்களுடைய மீன்பிடி தளவாட பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர். 

மேலும் அவர்கள் கரை திரும்பாத வண்ணம் அவங்களிடம் இருந்த எரி பொருளையும் இலங்கை கடற்படை பறித்துக்கொண்டு சென்றுள்ளது.  இதனால் நாகை மீனவர்கள் கரை திரும்ப முடியாமலும், யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமலும் கடலிலேயே தத்தளித்து வந்துள்ளனர். அதன்பின்னர் அந்த வழியே போன சக மீனவர்கள் டீசல் கொடுத்து அவர்களை கரை திரும்ப உதவியுள்ளனர்.  

இதையும் படிங்க: இனப்படுகொலை நடக்குது.. தென்னாப்பிரிக்க அதிபரை அதிர வைத்த டிரம்ப்..! வெள்ளை மாளிகையில் சர்ச்சை வீடியோ காட்சி!!

தற்போது சிறுதூர் மீன்பிடி துறைமுகத்தில கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சண்முகம், ஜெயராமன், சக்தி மயில், மணிமாரான் ஆகிய மீனவர்கள் கரை திரும்பி இருக்கிறாங்க. மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அதிகாரிகள் அத்துமீறிய சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்த கட்டமாக இலங்கை கடற்படை மீது எந்த மாதிரியான புகார் அளிக்கலாம். இந்த மாதிரியான போராட்டம் நடத்தலாம் என்ற ஒரு கோணத்திலும் பெருதூரை சேர்ந்த  மீனவர்கள் கூடி ஆலோசித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 36 மணி நேரத்தில் சம்பவம் உறுதி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share