சர்ச்சைகளை தாண்டி..!! தூத்துக்குடியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் தீவிர வாக்கு சேகரிப்பு..!!
தவெக தூத்துக்குடி வேட்பாளர் ஶ்ரீநாத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கள் சின்னத்தை அடையாளப்படுத்தி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் ஶ்ரீநாத், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார். விஜய்யின் நெருங்கிய நண்பரும், கல்லூரி காலத்து தோழருமான ஶ்ரீநாத், திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்தவர். அவரது அரசியல் பயணமும் விஜய்யின் துணையுடன் தொடங்கியுள்ளது.
மார்ச் இறுதியில் தவெக தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடி தொகுதிக்கு ஶ்ரீநாத் பெயர் இடம்பெற்றது. இந்த அறிவிப்பு கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியபோதிலும், ஶ்ரீநாத் தனது பிரச்சாரத்தை உற்சாகமாகத் தொடங்கினார். ஏப்ரல் 4-ம் தேதி தூத்துக்குடியில் வேட்புமனு தாக்கல் செய்த ஶ்ரீநாத், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஜி.கே.வாசன் தமாகாவை குறைந்த விலைக்கு மோடிக்கு விற்றுவிட்டார்... நாஞ்சில் சம்பத் விமர்சனம்...!
அவரது பிரச்சாரம் வீடு வீடாக, தெரு தெருவாக, பொது இடங்களில் என பல்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவது, அவரது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. சமீபத்தில் ராயபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார். இதுபோன்ற நேரடி தொடர்பு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்... விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!