×
 

ஜி.கே.வாசன் தமாகாவை குறைந்த விலைக்கு மோடிக்கு விற்றுவிட்டார்... நாஞ்சில் சம்பத் விமர்சனம்...!

விஜய் பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதில்லை என நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

இரட்டை எஞ்சின் தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று மோடி கூறுகிறார். இதற்கு எடப்பாடி என்ன பதில் சொல்லப் போகிறார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு. அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜக வாக்குறுதிக்கு கண்டனம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நெடுஞ்செழியன், புவனகிரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மகாலிங்கம் மற்றும் காட்டுமன்னார்குடி தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் உள்ள அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் நடந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.

 இது ஒரு அமானுஷ்யமான தேர்தல். அதிசயமான தேர்தல். எங்கள் தலைவர் விஜய் மொழியில் சொன்னால் இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். திமுக, அதிமுகவுக்கு மாறி மாறி வாக்களித்துதான் அது நாறி நாறி, இன்றைக்கு ஊழலில் ஊறி ஊறி போய் கிடக்கிறது. இதற்கு ஒரு மாற்று சக்தி வராதா என மக்கள் காத்திருந்த போதுதான் வைகோ மதிமுகவை துவக்கினார். ஆனால் அதைக் கொண்டு போய் தற்போது அறிவாலயத்திலே அடகு வைத்து விட்டார்.

இதையும் படிங்க: இன்று வாத்தி ரெய்டு... திக்குமுக்காடும் திருப்பூர்... விஜய் ரோடு ஷோ ஏற்பாடுகள் தீவிரம்...!

அதன் பிறகு பல ஆயிரம் ஏக்கருக்கு அதிபதியான கருப்பையா மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை துவக்கினார். ஆனால் அவரது மகன் வாயில்லா ஜி.கே. வாசன் இன்றைக்கு குறைந்த விலைக்கு மோடிக்கு விற்று, அந்த 5 வேட்பாளர்களும் இன்றைக்கு தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். அந்தக் கட்சி இன்றைக்கு கல்லறை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தேசிய பாரம்பரியத்தில் வந்த பிள்ளை இன்று வகுப்புவாத கட்சியின் சின்னத்தில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டார்.

அதன் பிறகு அந்த இடத்திற்கு வந்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். தேமுதிகவை துவக்கினார். திமுக அதிமுகவை தாண்டி ஒரு சக்தி வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த திமுக தலைமை அவரது கல்யாண மண்டபத்தை இடித்தார்கள். அன்றைக்கே உளவியல் ரீதியாக விஜயகாந்த் பாதிக்கப்பட்டார். அவரது மனைவி பிரேமலதா இன்றைக்கு தேமுதிகவை 5 ஆண்டு போக்கியத்திற்கு விட்டிருக்கிறார். அந்த இடத்தை நிரப்பத்தான் கமல் மக்கள் நீதி மையத்தை துவக்கினார். அவருக்கு 2 சீட் கொடுத்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க சொன்னதால் அவர் டார்ச்சை அறிவாலயத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் கடமையை செய்யத்தான் சிங்கத்தமிழன் சீமான் சில்லரை வந்தார். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு எக்ஸ்ட்ரா கேரேஜ். தொங்கு சதை. பெரியாரையும், அண்ணாவையும் அவமதிப்பதற்காக கூலி வாங்கிய ஓநாய். எங்கள் தலைவன் விஜய் செல்லும் இடமெல்லாம் அந்த கட்சி அடக்கம் ஆகிறது. இன்றைக்கு புதுச்சேரியில் 91 சதவீதம் வாக்கு பதிவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் 92 சதவீதம் பதிவாகும். முடிவில் விஜய்தான் முதலமைச்சர் என்ற செய்தி வரும்.

இன்றைக்கு இன்றைக்கு இந்த கட்சி இரண்டு கழகங்களை எதிர்த்து நிற்கிறது. எனக்கு தெரிந்து திமுக அரசியலில் 26 கட்சிகளோடு கூட்டணி வைத்து இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் தொங்கு சதை. அவர் இன்றைக்கு 10 கட்சிகளோடு அதுவும் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்து இருக்கிறார். பாஜக இந்த மண்ணின் மகத்துவத்தையும், புனிதத்தையும் புனித கெடுக்க நினைக்கிறது. ரெட்டை இன்ஜின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நான் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து கேட்கிறேன். ஊரெல்லாம் மேய்ந்து கொண்டிருக்கின்ற எடப்பாடி என்னும் எருமையை பார்த்து கேட்கிறேன். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய். அதிமுக ஆட்சி இல்லை. வரப்போகிற ஆட்சி பிஜேபி ஆட்சி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பீகாரின் முதல்வர் மத்திய அமைச்சராக இருந்த நிதிஷ்குமார். முதலமைச்சரான பிறகு இன்றைக்கு அவரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிற்கச் சொல்லுகிறார்கள். பாட்னா நகரில் பிஜேபி முதல்வரை தேடும் படலம் தொடங்கி விட்டது. நாளை இது தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். பாஜக ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வர துடிக்கிறார்கள். ஸ்டாலின் தலைமையில் 26 கட்சிகள், எடப்பாடி தலைமையில் 10 கட்சிகள் இந்த 36 கட்சிகளையும் எதிர்க்க கூடிய ஒரு ஆண்மகன்தான் விஜய். 

இதையும் படிங்க: 45 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு..! தி.நகர் தவெக வேட்பாளர் ஆனந்த் வாக்குறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share