×
 

பாஜக ஆளும் மாநிலத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை... முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..!!

பாஜக ஆளு மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை மிகத் தீவிரமாக எழுப்பி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கூட பல இடங்களில் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை” என்று அவர் நேரடியாகக் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை மறைக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.பாஜக தரப்பிலும் இதே குரல் வலுத்து ஒலிக்கிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டதாகவும், குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

சமீபத்தில் கரூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களை எடுத்துக்காட்டி, மது கொள்கை காரணமாக இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர். மத்திய அமைச்சர் அமித் ஷா கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் 7.1% அதிகரித்திருப்பதாக சட்டப்பேரவையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டு இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி கொடுத்தார். மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் பாதுகாப்பானது என மத்திய அரசின் குறிப்பை சொல்லி உள்ளதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முன் வருவீர்களா என்று நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் வன்முறை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: ஸ்டாலின் படத்துடன் ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவர்... அண்ணாமலைப் பல்கலை. யில் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share