×
 

10 ஆண்டுகால நெடுஞ்சாலை மாஸ்டர் ப்ளான்!! தமிழக அரசு பக்கா ஸ்கெட்ச்! திட்ட அறிக்கையில் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுக்கு தேவையான நெடுஞ்சாலை 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்படும் என செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அடுத்த 10 ஆண்டுக்கான நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும் என்று மாநில அரசின் 'வெற்றித் தமிழகம்' செயல்திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு, புதிய நெடுஞ்சாலைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை மூன்று கட்டங்களாக வகுத்து செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அதிகாரிகளுடன் முதல்வர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் புதிய அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. 'பாதுகாப்பான சாலைகள் இயக்கம்' என்ற திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றும், முக்கிய சாலைகளில் அவசரகால சிகிச்சை மையங்களும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: TN TET! ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள்! உற்சாகமாக வந்த தேர்வர்கள்!

சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய 'நம்ம சாலை' செயலி மேலும் மேம்படுத்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை பராமரிப்பில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.

சென்னை–கன்னியாகுமரி எட்டு வழிச்சாலை திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தவும், சென்னையின் முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஆய்வும் மேற்கொள்ளப்படும். மேலும், மாநிலத்தின் எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு 10 ஆண்டுக்கான விரிவான நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும்.

இதனுடன், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுக மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. நாகப்பட்டினம்–கொழும்பு, நாகப்பட்டினம்–கோலாலம்பூர், ராமேஸ்வரம்–தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு பயணிகள் கப்பல் மற்றும் படகு சேவைகளை தொடங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்னை–புதுச்சேரி சுற்றுலா படகு சேவை, மீனம்பாக்கம்–கிளாம்பாக்கம் நான்கு வழி மேம்பாலம், சென்னை, கோவை, தூத்துக்குடியில் விரைவு சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ.க்கு ஒருமுறை பயணிகள் ஓய்வு மையங்கள் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களும் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

 

இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்த பெண்! பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல்! இருவர் கைது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share