இனி கடைசி பெஞ்ச் இல்லை... கேரளாவால் இன்ஸ்பயர் ஆன தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை!
பள்ளி வகுப்பறைகளில் கடைசி பெஞ்சு முறையை அகற்றி, 'ப' வடிவ இருக்கை அமைப்பை அறிமுகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் வெளியான ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படம் கடைசி இருக்கையில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகக் கூறியதை அடுத்து கேரளத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக அரைவட்ட வடிவில் அல்லது 'ப' வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது என்றும் 'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது. எனவே 'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மாற்றம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், அனைவரும் சமமாக கவனம் பெறுவதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும், வாய்ப்புள்ள வகுப்பறைகளை 'ப' வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் இதனால் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. எனவே, தமிழகத்தில் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்த பள்ளி வகுப்பறை அமைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் பாரம்பரியமாக கடைசி பெஞ்சு பசங்க என சொல்லும் வழக்கம் முற்றுப்பெறுகிறது.
இதையும் படிங்க: மினிஸ்டர் பி.ஏ.வுக்கே இந்த கதியா? - அமைச்சர் நிகழ்ச்சியிலேயே உதவியாளரை அடி வெளுத்த திமுக உ.பி.க்கள்...!
இதையும் படிங்க: #BREAKING மன்னிப்பு கேட்ட சென்னை ஆணையர் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு...!