100 மகளிர் பேருந்து சேவை நிறுத்தமா.? பெண்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!
சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மகளிர்காக இலவசமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை மகளிர் பயன்படுத்தி பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பதும் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இயங்கும் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுவிட்டதாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது.
இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவுபடுத்தியுள்ளது.உண்மையில், சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (CMTC) கடந்த மார்ச் மாதம் முதல் 1,724 பேருந்துகளை மகளிர் இலவச சேவைக்காக இயக்கி வருகிறது. தற்போது இந்த பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த குறைப்பும் செய்யப்படவில்லை.
அரசு சார்பில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு அரசு இயக்கும் இலவச பயணத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. பெண் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த சேவை நிறுத்தப்படவில்லை என்பதை அரசு தரப்பு வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: கரூர் அரசு வேலை சர்ச்சை..! CPM சண்முகம் எதிர்ப்பு..! வலுக்கும் கண்டன குரல்கள்..!!
இத்தகைய தவறான செய்திகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அதிகாரபூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்பி, பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மகளிர் இலவச பேருந்து சேவை தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியான தகவல். பயணிகள் எந்த சிரமமும் இன்றி பயன்படுத்தலாம். இந்த விளக்கம் அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகளில் CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பதில் சொல்லுங்க..! தமிழக அரசுக்கு ஹை கோர்ட் ஆணை..!!