வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

தமிழகத்தில் உயிர் குடிக்கும் மழை சேதம்! 9 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 32 பேர் பலி! அச்சுறுத்தும் அர்னாப் புயல்!

மழையால் 348 குடிசைகள் உட்பட மொத்தம் 532 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 263 கால்நடைகளும் 5,413 கோழிகளும் இறந்துள்ளன.

தமிழகத்தில் இம்மாதம் முதல் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை மழை தொடர்பான சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இடி, மின்னல் தாக்குதல், சுவர் இடிந்து விழுதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இறந்தவர்களில் 21 பேர் ஆண்கள், ஒன்பது பேர் பெண்கள் மற்றும் இருவர் குழந்தைகள் ஆவர்.

கோவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. மழையால் 348 குடிசைகள் உட்பட மொத்தம் 532 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 263 கால்நடைகளும் 5,413 கோழிகளும் இறந்துள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இதையும் படிங்க: ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

இது ஆரம்பத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 26 ஆம் தேதி ‘அர்னாப்’ புயலாக உருவானது. இது நாளை தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 28 ஆம் தேதி விசாகப்பட்டினம் மற்றும் பபாத்லா இடையே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து அதிகாரிகள் தகவல்களைத் தொகுத்து வருகின்றனர். வானிலை அமைப்பு தொடர்பான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மழை மற்றும் புயல் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்! 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு! சென்னைக்கும் எச்சரிக்கை!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी