திரிஷா குறித்த நயினார் பேச்சு..! இது நாகரிக அரசியலா? MP தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்..!
விஜய் மற்றும் திரிஷா குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரீகப் பேச்சுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது நடிகர் விஜய்யை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும்.
வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது. இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக, பெண்ணொருவரின் பெயரை இழுத்து அரசியல் எதிரியை தாக்குவது தரம் தாழ்ந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரிக விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!
பொது வெளியில் பயணிக்கும் பெண்ணை பற்றி அவதூறாக பேசுவது அழகல்ல என்று தெரிவித்தார். பெண்களை கண்ணியத்துடன் பேசுவதும் நடத்துவதுமே நாகரீக அரசியல் என்றும் அவர் தெரிவித்தார். நடிகை திரிஷாவை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் அநாகரிகமாக விமர்சனம் செய்திருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நைனாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “உங்க லெவல் தெரியாம ஓவரா பெருமை பீத்தாதீங்க”... விஜயை லெஃப்ட். ஹேண்டில் ஒதுக்கிய அதிமுக முக்கிய புள்ளி...!