மயிலாப்பூரில் திமுக முறைகேடு..! "தட்டிக் கேட்டா அடிக்கப் பாயுறாங்க"..! தமிழிசை பகிரங்க எச்சரிக்கை..!!
மயிலாப்பூர் தொகுதியில் திமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் தட்டி கேட்டால் அடிக்கப் பாய்வதாகவும் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் ஏற்கனவே பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் ஆதரவாளர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் பணம் சிக்கியிருந்தது. கடும் சர்ச்சையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
ஐடி கார்டு இல்லாமல் வாக்களிக்க அனுமதிக்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அவர் முறையிட்டார்.
ஐடி கார்டு இல்லாமல் உள்ளே அனுப்புவதாகவும், எப்படி ஓட்டு போடுகிறார்கள் என்ற கேள்வி எழுப்பினார். தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்றும் நியாயமாக நடக்கவில்லை என்றால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவினரை அப்புறப்படுத்தியதால் கோபமடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஐடி கார்டு இல்லாமல் ஓட்டு போடுறாங்க..! தமிழிசை பேச்சுக்கு எதிர்ப்பு..! வாக்குச்சாவடி மையத்தில் பிரச்சனை..!
இந்த நிலையில் மயிலாப்பூர் 13ம் எண் பூத்தில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதை தட்டி கேட்டதற்கு தங்களை தாக்க பாய்ந்ததாக கூறியுள்ளார். தங்கள் குரலை அடக்கி விட முடியாது என்றும் பொதுமக்களுக்காக இந்த குரல் ஓங்கி ஒலிக்கும் எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ள ஓட்டு சர்ச்சை..! திமுகவினர் தர்ணா..! களேபரமான ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடி..!!