பெண்களின் உரிமை மறுக்கப்படும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்..! தமிழிசை ஆதங்கம்..!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பெண்களின் உரிமை பறிக்கப்படும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள் என்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகளிர் இடஒதுக்கீடு (131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.
மக்களவையில் இன்று மாலை நடைபெற்ற 'டிவிஷன்' முறை வாக்கெடுப்பில் மசோதாக்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பதிவான 489 வாக்குகளில் 278 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 211 பேர் எதிராகவும் வாக்கு. மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு 326 வாக்குகள் தேவை. அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 326 வாக்குகள் தேவை.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!
ஆனால், அரசுத் தரப்பிற்கு 48 வாக்குகள் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது. பெண்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார் என்று தெரிவித்தார். இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் இதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமை பறிக்கப்படும் போது பட்டாசு வைத்து கொண்டாடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!