×
 

பிரதமர் சர்ச் போயிட்டாரு... ஸ்டாலின் கோவிலுக்கு போவாரா? முதல்வருக்கு தமிழிசை கேள்வி...!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிரதமர் தேவாலயம் சென்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்து பண்டிகைக்கு கோவிலுக்கு செல்வாரா என தமிழிசை கேள்வி எழுப்பினார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனைகள், கரோல் பாடல்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாட்டுக் கொட்டகையில் கிறிஸ்து பிறந்த காட்சியை நினைவுகூரும் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை வீடுகளையும் தேவாலயங்களையும் அழகுபடுத்தின.

இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதன்படி, டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் (Cathedral Church of the Redemption) தேவாலயத்தில் காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனையில் பாடல்கள், கரோல் இன்னிசை, பிரார்த்தனைகள் இடம்பெற்றன. டெல்லி பிஷப் ரெவ். டாக்டர் பால் ஸ்வரூப் பிரதமருக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்த பிறகு பிரதமர் மோடி பாதிரியார்களுடன் கலந்துரையாடினார்.

இதையும் படிங்க: 2 மாவட்டங்களில் டைரக்ட் விசிட்... திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்...!

பிரதமர் மோடி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ததை சுட்டிக்காட்டி உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். உண்மையான மதசார்பற்ற கட்சியினில் அது பாஜக தான் என்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி தேவாலயம் சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார். ஹிந்து பண்டிகைக்கு முதல்வர் கோவிலுக்கு செல்வாரா என்று தமிழிசை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: நயினாருக்கு எரிச்சலா? திமுகவின் இந்துமத வெறுப்பு... பதிலடி கொடுத்த தமிழிக பாஜக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share