×
 

அட்ராசக்க..! பால், மீன்வள துறையில் தமிழகம் தான் முன்னணி.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒட்டுமொத்த வளர்ச்சியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பாராட்டு, புகழை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால், மீன்வள செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும் உணவு தானிய உற்பத்தி 457.08 லட்சம் மெட்ரிக் டன், சராசரியாக 5.66 சதவீத வேளாண் வளர்ச்சியை தமிழ்நாடு எட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 5,427 கி.மீ.நீளம் வரையிலான நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்து உள்ளதாகவும் தமிழ்நாடு முழுவதும் 449 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் 62,820 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடாத சனி..! அரசாணையை மீறி ஆப்பு வைத்துக் கொண்ட செந்தில் பாலாஜி..!

மேலும் வேளாண் வளர்ச்சி திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாகவும் மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளி, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளதாகவும் வேர்க்கடலை, தென்னை, உற்பத்தி திறனில் 3-வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share