×
 

தமிழகத்தில் மது விற்பனை சாதனை..!! குடியரசு தின விடுமுறைக்கு முன் ரூ.220 கோடி கடந்து சேல்ஸ்..!!

குடியரசு தினத்திற்கு முன்தினம் ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று (ஜனவரி 26) மூடப்பட்டிருந்ததால், அதற்கு முந்தைய நாளான ஜனவரி 25 அன்று மது பிரியர்கள் அலைமோதினர். இதனால் ஒரே நாளில் ரூ.220 கோடி 75 லட்சத்துக்கும் அதிகமான மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது. இது தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க அளவாகும்.

மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதால், டாஸ்மாக் கடைகளில் மட்டுமல்லாமல், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் மதுபான பார்களிலும் நெரிசல் அதிகரித்தது. மனமகிழ் மன்றங்கள் மூலம் மட்டும் ரூ.5 கோடி 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. மொத்த விற்பனை ரூ.220.75 கோடியை எட்டியுள்ளது. விடுமுறைக்கு முந்தைய நாளில் மது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் காரணமாக இந்த அளவுக்கு விற்பனை உயர்ந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், கடந்த பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை காலத்தில் (ஜனவரி 14 முதல் 18 வரை) 5 நாட்கள் தொடர்ந்து மதுக்கடைகள் திறந்திருந்தன. இதனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு பொங்கல் காலத்தில் சுமார் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது ரூ.140 கோடி அதிகம் என டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுப் பெண்கள் தாலி அறுக்க பாக்குறீங்களா ஸ்டாலின்? டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் தாக்கு..!

பொங்கல் கொண்டாட்டத்துடன் இணைந்து மது நுகர்வு அதிகரித்ததால் விற்பனை உயர்ந்துள்ளது. ஜனவரி மாதத்தில் ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய இரு நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன. அடுத்ததாக பிப்ரவரி 1-ஆம் தேதி தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட உள்ளன. இதனால் அன்றைய தினம் மது விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை அதிகரிப்பு காரணமாக அரசுக்கு வருவாய் கணிசமாகக் கிடைத்தாலும், மது நுகர்வு சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது தொடர்பான போக்கு தமிழகத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது. இதனால், அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் மது விற்பனை தடை ஏற்படுத்தும் போதெல்லாம் முந்தைய நாளில் விற்பனை சாதனை படைப்பது வழக்கமாகிவிட்டது. வரும் காலங்களில் இதுபோன்ற போக்கு தொடருமா என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த 2 நாட்கள் டாஸ்மாக் மூடல்..!! தமிழக அரசு அதிரடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share