வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் விழா.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..

லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் இக்கோயிலில் பங்குனி தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் உபகோயிலாகும். சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக விளங்கும் இக்கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் பூக்களை கூடையில் ஏந்தி, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனா். 

இதையும் படிங்க: கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. 5 வீரர்கள் படுகாயம்..!

பூச்சொரிதல் விழாவையொட்டி உலக மக்களின் நன்மைக்காக அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியது. மேலும் அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பூக்களை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனா். இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் இணை ஆணையா் தலைமையில் கோயில் குருக்கள், பணியாளா்கள் செய்தனா்.

இதையும் படிங்க: நாண்மதிய பெருமாள் கோவில் தீர்த்தவாரி.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी