முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை... பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற தவெக அமைச்சர்...!
மாதம் 5000 முடித்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் மதன் ராஜா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனம் மேற்கொண்டார் : ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து கள ஆய்வு செய்து மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அமைச்சர்: மாதம் 5000 முடித்திருக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்
ராமநாதபுரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மதன் ராஜா இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார் அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட அவர் முதலில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் ராமநாத சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டார் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து ஆராய்ந்து இனிவரும் காலங்களில் மக்களோடு மக்களாக உடனிருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். கோவில் சார்பாக லட்டு விற்பனையில் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு முதல் முறையாக வந்துள்ளதாகவும் இது குறித்து விரைவில் கள ஆய்வு நடத்தி அதுகுறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்
இதையும் படிங்க: மூதாட்டிக்கும் பாதுகாப்பில்ல.. மனசு பதைபதைக்குது... நயினார் ஆதங்கம்..!!
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தமட்டில் அடிப்படைத் தேவைகள் என்பது நீர் பிரச்சனை ஆகும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் பிரச்சனை குறித்த கள ஆய்வு நடத்தி மாவட்ட ஆட்சியுடன் இணைந்து நீர் பிரச்சனை குறித்த விஷயங்களை எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும்
மாவட்டத்தில் இளைஞர்கள் அதிகம் படித்துள்ளனர் ஆனால் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லக்கூடிய ஒரு சூழல் நிலவுகிறது அதற்குண்டான கள ஆய்வு நடத்தி மாவட்டத்தில் எந்த மாதிரியான தொழில்கள் நடத்தினால் இளைஞர்களை கவர கூடும் என்று நடவடிக்கையும் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில் குறித்த வளர்ச்சிக்கு என்னால் முடிந்த முயற்சியை நான் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 5 ஆயிரம் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் ஏதும் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்
இதையும் படிங்க: "நான் முதல்வன்"..! சாதனையை அழிக்க முடியாது..! ஸ்டாலின் திட்டவட்டம்..!!