×
 

அண்ணாமலையாருக்கு அரோகரா...!! கொட்டும் மழையிலும் குறையாத பக்தி பரவசம்... திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்...! 

திருவண்ணாமலையில் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்திற்கு இடையே ஏற்றப்பட்டது பரணி தீபம்.

உலக பிரசிதி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒன்பது நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலை, மாலை என இரு வேலைகளும் பஞ்சமூர்த்திகள் மாடவீதி விழா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தன. பத்தாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீ தீபாராதனை நடைபெற்றது. 

பத்தாம் நாளான இன்று அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறை முன் மிகப்பெரிய கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி, அதன் மூலம் அண்ணாமலையார் சன்னதி முன்பே நெய்யால் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.  இவ்வாறு ஐந்து தீபங்கள் ஏற்றுவது சிவபெருமானின் ஐந்து தொழில்களான காத்தல், அழித்தல்,படைத்தல், அருளல்,மறைத்தல் ஆகிய ஐந்து முகங்களின் குணங்களையும்,ஐந்து தொழில்களையும் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகாலை வேலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்தபடியும், நனைந்த படியும் பக்தி பரவசத்துடன்  பங்கேற்று, பரணி தீபம் ஏற்றுகையில் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என முழக்கமிட்டனர். இந்த பரணி தீப விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நடிகை ரோஜா, மாவட்ட ஆட்சியர் தற்போகராஜ், ஐஜி அஸ்ராகர், டிஐஜி தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க: தி. மலை தீபம்... கிரிவலப் பாதையில் வண்டியை இயக்கினால்.... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை...!

கார்த்திகை தீபத் திருநாளில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து வகையான தீபங்கள் ஏற்றப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் ஐந்து அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றுவது பாவங்களில் இருந்து விடுபட எமதர்மனே ஏற்றச் சொல்லிய தீபம் என்று கூறப்படுகிறது. இந்த ஐந்து தீபங்களை நெய் விட்டும்,வீடுகளில்பிற இடங்களில் எரியும் தீபங்களை நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவது மிகவும் சிறப்பு.

இதன் உச்சகட்டமாக கார்த்திகை தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமாக காட்சி அளித்து வருகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக ஐஜி அஸ்ராகர் தலைமையில் 15ஆம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தி.மலையில் 15,000 போலீஸ் பாதுகாப்பு..!! சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share