×
 

பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

தென்பெண்ணையாற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டம் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றில் களை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாமல் மறுத்து வருவதாகவும் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், அலியாளம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் வலதுபுறத்தில் 9 கி.மீ தொலைவிற்குக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிற்கு அக்கால்வாயை நீட்டிப்புச் செய்து, சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் உள்ள 12 ஏரிகள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 13 ஏரிகள் நேரடியாகப் பயன்பெறும் வகையில் கிளை வாய்க்கால் வெட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் அதனை நிறைவேற்ற தமிழக அரசு மருத்து வருவதால் மக்கள் வேதனை அடைந்துவதாக சீமான் குறிப்பிட்டார்.

ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளாகியும் நிலம் வழங்கும் சிறு குறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத திமுக அரசு, அதையே காரணம் காட்டி கிளைவாய்க்கால் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகவும், இராயக்கோட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தபோதும், திமுக அரசு அதனை அலட்சியப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற மறுத்துவருவது ஏற்க முடியாத கொடுஞ்செயல் என்றும் சீமான் கூறியுள்ளார். பரந்தூரில் விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்க பல நூறு கோடிகளை கொட்டி அவசர அவசரமாக நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முனையும் திமுக அரசு, அந்த ஆர்வத்தையும் வேகத்தையும் ஆயிரத்தில் ஒரு பங்காவது வேளாண்மையை வளர்க்கும் விவசாயிகளை வாழ்வைக்கும் தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தில் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண்மையை அழித்து, விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மடலா என்றும் இதுதான் திமுக அரசு வேளாண்மையை வளர்க்கும் முறையா என்ற கேள்விகளுக்கு ஆட்சியாளர்களின் பதிலென்ன எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: “எட்டி ஒரு உதை விட்டேன்...” - என்னடா இது சீமானுக்கு வந்த கொடுமை? - வைரலாகும் வீடியோ...!

இதையும் படிங்க: அடுத்த சம்பவத்தை செய்த நாதக.. கால்நடைகளுக்கு முன் உணர்ச்சி பொங்க பேசிய சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share