தொகுதி பேரத்தை தொடங்கிய திருமா? முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே காய் நகர்த்திய சம்பவம்..!
2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கு வரும் வாக்குகளில் நான்கில் ஒரு வாக்கு விசிக உடையதாக இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள லால் புரத்தில் ஐயா. எல். இளைய பெருமாள் திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, இளையபெருமாள் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிதம்பரத்தின் சீர்திருத்தப் பிள்ளை திருமாவளவன் என்று புகழ்ந்து பேசினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் விழா மேடையில் அமர்ந்திருக்கும் போது விடுதலை சிறுத்தைகள் பற்றி தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.
அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு விழும் வாக்குகளில் நான்கில் ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உடையதாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் நூறு வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் உடையதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒரு வாக்கு கூட சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு விழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே கூடுதல் தொகுதிகளை கேட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆயத்தமாகி கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் முன்னிலையில் திருமாவளவன் சொன்ன ஓட்டுக் கணக்கின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான்கில் ஒன்று விசிக ஓட்டு என்றால் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று திருமாவளவன் கேட்கிறாரா என்றும் 2026 தேர்தலுக்கான தொகுதி வீரத்தை திருமாவளவன் தொடங்கி விட்டாரா என்று கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ள திருமாவளவன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும், மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்று, தமிழக அரசியலில் தனது பலத்தை நிரூபித்துள்ளது விசிக.
இந்நிலையில், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கோர விசிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியன. இந்த நிலையில் முதலமைச்சர்களுக்கும் மேடையிலேயே, நான்கில் உருவாக்கு விசிக உடையதாக இருக்கும் என்று கூறியபோது, அதிக தொகுதிகளை திருமாவளவன் சூசகமாக கேட்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஓரணியில் இருந்தா எந்த டெல்லி அணி கனவும் பலிக்காது..! CM ஸ்டாலின் ஃபயர் ஸ்பீச்..!
இதையும் படிங்க: அமித்ஷா டெல்லியில FLIGHT ஏறுனா... தமிழ்நாட்டுல அள்ளு விடுது! நயினார் ஃபயர் ஸ்பீச்