அம்மோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி... இறந்தவர்கள் உடல்களை எடுத்துச் செல்வதில் புது சிக்கல்...!
ஒடிசா அதிகாரிகள் சடலங்களை பெறுவதில் தாமதம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்கள் சடலங்கள் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு எம்பாமிங் செய்யப்பட்ட உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா அதிகாரிகள் சடலங்களை பெறுவதில் தாமதம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவால் 69 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 13 பேரும் என மொத்தம் 69 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்
அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் நலமடைந்து சிகிச்சை முடிந்து திரும்பி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி இதுவரை 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்
இதையும் படிங்க: "முடிஞ்சுது"... அஞ்சே நிமிஷத்துல கொளத்தூர் ஆடி போச்சு..!! ஸ்டாலின் சைகையால் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்..!!
அதில் வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 3 பேரும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஒருவரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து 2 பேரும்
ஸ்டான் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூன்று பேரும் என இன்று காலை நிலவரப்படி 9 பேர் பலியாகி உள்ளனர்.
அதன்படி வேல்ஸ் மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங்கா (19 ) புல்மோனி ஜுவாங்கா (23) ஷிபானி (22), சம்பாபதி ஜுவாங்கா (23)
உள்ளிட்டவர்களின் உடல்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உடல்கள் எம்பாமிங் செய்யப்பட்டும் நேற்று முடிக்கப்பட்டது . முடிக்கப்பட்ட உடல்கள் ஒடிசா மாநில அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு உடல்களை ஒடிசா கொண்டு சென்று ஒப்படைக்க தயார் செய்யப்பட்டு இருந்த நிலையில் உடல்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள்
சடலங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது,
நான்கு சடலங்களும் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு உடல்கள் முழுவதும் பேக்கிங் செய்யப்பட்டு பின்னர் சென்னை விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து கார்கோ விமானத்தில் ஒடிசா கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது ,
இதையும் படிங்க: எதுக்கு கதறுறீங்க..? சட்டசபையை தெறிக்க விட்ட முதல்வர் விஜய்..! கொந்தளித்து திமுகவினர் வெளிநடப்பு..!!