×
 

சிறுமியை சீரழித்த காமக்கொடூரன் இவன் தானா? உ. பி. இளைஞரிடம் தீவிர விசாரணை..!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச இளைஞர் ஒரு வருடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரப்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை கடத்தி அருகிலுள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

சிறுமி தப்பி, தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினர் ஏற்கனவே இரண்டு தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மேலும் 4 கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 40 போலீசார் அடங்கிய குழுவையும் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். 

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை விரைந்து பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐயா.. அவனை எங்க கிட்ட குடுங்க..! வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கதறல்..!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை அடையாளம் காட்டினால் 5,00,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் கீழே விழுந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளிய போ கூடாது.. எதையும் சொல்ல கூடாது..! பெண் போலீஸ் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share