×
 

இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

இதுவரை இருந்த முதலமைச்சர்களிலேயே மிக மோசமானவர் விஜய் என அதிமுக எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் (TVK) நிர்வாகத் திறனைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக அரசின் நடவடிக்கைகள் மற்றும் விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்வைத்த முக்கிய விமர்சனங்கள் பின்வருமாறு

தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் இதுவரை பொறுப்பிலிருந்த முதலமைச்சர்களிலேயே மிகவும் மோசமான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சராக விஜய் விளங்குகிறார் என ஓ.எஸ். மணியன் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.  

அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும் மாநிலம் கடும் வறட்சியைச் சந்தித்தது. ஆனால், அப்போது எடப்பாடியார் அந்த வறட்சியை எதிர்கொண்டு கையாண்ட விதத்திற்கும், தற்போதைய முதலமைச்சர் விஜய் கையாளும் விதத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது" எனச் சுட்டிக்காட்டினார்.  

இதையும் படிங்க: உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

தற்போது தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் தவெக அரசு, எவ்வித திட்டமிடலும் இன்றி கண்மூடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்தார்.  

அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா 'இது அம்மா ஆட்சி' எனக் கூறி வருகிறார். ஆனால், உண்மையில் இங்கு அம்மா ஆட்சி நடக்கவில்லை, வெறும் 'சும்மா ஆட்சி' தான் நடந்து கொண்டிருக்கிறது என எள்ளி நகையாடினார்.  

விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்றால், அதை அரசு மக்களிடமும் விவசாயிகளிடமும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். அரசிடம் தெளிவான கொள்கை இல்லாததால் தற்போதைய நிலையில் விவசாயிகள் சொல்லொணா வேதனைக்கும் துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் எனத் தனது பேட்டியில் சாடினார்.  
 

இதையும் படிங்க: அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share