திருச்செந்தூரில் திடீரென கரை ஒதுங்கிய ஆபத்து; கடலில் பக்தர்கள் கவனமாக குளிக்க எச்சரிக்கை... பட்டாலோ தோல் உரிஞ்சிடுமாம்...!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள். பக்தர்கள் அதிக சிரமம் . பாதுகாப்பாக நீராட கோவில் நிர்வாகம் தகவல்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்வார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடிய பிறகே முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவில் முன்புள்ள கடற்கரையில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடலில் நீராடும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடலில் மிதந்து வந்த கண்ணாடி போன்ற தோற்றமுடைய ஜெல்லி மீன்கள், கடலில் குளிக்கும் பக்தர்களின் உடலில் ஊறல்கள் ஏற்படுகிறது. மனிதர்களின் உடலில் பட்டாலே, நெருப்பு பட்டதுபோல, தோல் அப்படியே உரிந்து வந்துவிடுமாம். இது தெரியாமல் சில பக்தர்கள் கடலில் குளித்திருக்கிறார்கள். அப்போது பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
வெயில் காலத்தில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதும், கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் ஜெல்லி மீன்கள் கரையோர பகுதிகளுக்கு அதிகளவில் வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "எல்லாத்தையும் முருகர் பார்த்துப் பாரு"..! திருச்செந்தூரில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குடும்பத்துடன் சாமி தரிசனம்..!
இன்றைய தினம் 5க்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் மிதந்து வந்த ஜெல்லி மீன்களை சேகரித்து, பக்தர்கள் குளிக்காத ஆழமான கடல் பகுதிகளில் கொண்டு சென்று விட்டனர்.
மேலும், கடலில் குளிக்க வரும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஜெல்லி மீன்கள் தென்பட்டால் உடனடியாக கரைக்கு வர வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலோர பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு!": சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆழ்ந்த இரங்கல்!