×
 

திருச்செந்தூரில் திடீர் மாற்றம்.. ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்த திடுக்கிடும் செயல்...!

திருச்செந்தூரில் திடீரென 70 அடி உள்வாங்கி காணப்படும் கடல். ஆபத்தை உணராமல் கடலின் ஆழம் மற்றும் பாறை உள்ள இடங்களில் நீராடும் பக்தர்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அமாவாசை பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்களில் உள்வாங்கியும், கொந்தளிப்புடனும் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதலே கோவில் முன்புள்ள கடல் சுமார் 70 அடி உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிகின்றன.

இதையும் படிங்க: நான் பேசுனது தப்பு இல்ல! தொண்டர்கள் எண்ணத்தை தான் பிரதிபலித்தேன்... செங்கோட்டையன் விளக்கம்

கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் அந்த பாசி படிந்த பாறைகள் மேல் நின்று புகைப்படம் செல்பி எடுத்து வருகின்றனர். மேலும் சிலர் அந்த பாறைகள் வழியாக கடலுக்குள் ஆபத்தான முறையில் சென்று நீராடி வருகின்றனர்.

ஆபத்தான முறையில் கடலில் நீராடும் பக்தர்களை எச்சரிக்க கடற்கரை பகுதியில் காவலர்களோ, கோவில் கடற்கரை பணியாளர்களோ இல்லாத நிலை உள்ளது. மேலும் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் அவ்வப்போது கடல் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

இதனால் மாதம் தோறும் நீராடும் பக்தர்களுக்கு கால்முறிவு ஏற்படுகிறது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக பக்தர்கள் நீராட வேண்டும் என்ற அறிவுறுத்தல் பலகை தற்போது வரை வைக்கப்படாத நிலை உள்ளது. எனவே உடனடியாக கடற்கரை ஓரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவிப்பு பலகையும், எச்சரிக்கை பலகையும் வைக் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: வெள்ளத்தால் சிதைந்த வட மாநிலங்கள்! நிவாரணம் கோரும் மாநில அரசுகள்...பிரதமர் மோடி DIRECT VISIT

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share