வெற்றி வேலனுக்கு அரோகரா... விண்ணை பிளந்த கோஷம்... சூரனை சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர்...!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்கார விழா கோலாகலமாக நடந்தது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் ஒரு மாபெரும் திருவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழா முருகப்பெருமானின் அவதார நோக்கமான அசுர சம்ஹாரத்தை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் போன்ற இதிகாசங்களில் விரிவாகக் கூறப்பட்ட இந்நிகழ்ச்சி, திருச்செந்தூரை உலகளாவிய முருக பக்தர்களின் மையமாக மாற்றியுள்ளது.
முருகன் வளர்ந்து, தேவர்களின் படைத்தலைவராகப் பொறுப்பேற்று, சூரபத்மனுடன் போர் தொடுத்தார். சூரபத்மன் மாய சக்திகளால் பல உருவங்களை எடுத்து முருகனை எதிர்த்தான். இறுதியில் முருகனின் வேல் சூரபத்மனைத் தாக்கி, அவனை இரு பகுதிகளாகப் பிளந்தது. அப்பகுதிகள் சேவலாகவும் மயிலாகவும் மாறின. சேவல் முருகனின் கொடியாகவும், மயில் அவரது வாகனமாகவும் ஆயின.
ஆண்டுதோறும் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு திருச்செந்தூரின் கடலோரத்தில் நிகழும் சூரசம்காரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: அடுத்த வாரம் சூரசம்ஹாரம்..!! திருச்செந்தூருக்கு போலாமா மக்களே..!! ஸ்பெஷல் பஸ் அறிவித்த TNSTC..!!
முதலில் திருச்செந்தூர் முருகனின் வேல் புறப்பட்டது. சுவாமி ஜெயந்தி நாதரின் வேல் யானை முகம் கொண்ட தாரககாசுரனை வதம் செய்தது. பிறகு அய்யனாரின் யானை வாகனமாக மாற்றப்பட்டார் தரகாசுரன். இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசுரனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். பிறகு ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்தார். மாமரமாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மனை ஆட்கொண்டார் ஜெயந்திநாதர். சூரனை வதம் செய்து கந்த சஷ்டி நாயகனாக திருச்செந்தூர் ஜெயந்திநாதர் காட்சியளித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி கொடுத்த அல்வா தான் எல்லாம்... அதிமுக துண்டு துண்டா போச்சே! அமைச்சர் சேகர்பாபு பதிலடி...!