×
 

ரிதன்யாவை எரித்த சாம்பல் சூடு அடங்குவதற்குள் கணவர் குடும்பம் செய்த காரியம் - கொந்தளித்த வழக்கறிஞர்...!

அவிநாசி பகுதியில் இளம் பெண் ரிதன்யா தற்கொலை வழக்க  இடையீட்டு மனு மீது கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் விசாரணை 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இளம் பெண் ரிதன்யா திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஆனது தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள   கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில், கவின்குமார் தரப்பில் கால் அவகாசம் கேட்டதால் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இது தொடர்பாக ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட  ரிதன்யா வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் மற்றும் மாமனார் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம் அதன் விசாரணையில் அவர்கள் அவகாசம் கேட்டுக் கொண்டதால் நீதிபதி 7ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

ஒரு அமர்வு நீதிமன்ற வழக்கில் 10 நாட்களுக்குள் யாரும் ஜாமீன் கேட்டு மனு செய்ததில்லை. இவர்கள் அரசியல் மற்றும் பணபலம் மிக்கவர்களாக இருப்பதால், இறந்து அந்த பெண்ணின் சாம்பல் ஆறுவதற்கு முன்பு, 2 நாட்களில் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் எதிர் மனு தாக்கல்  செய்துள்ளோம் அதன் விசாரணை அடுத்த திங்கட்கிழமை நடைபெறும்.

இதையும் படிங்க: MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!

முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமாக கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சித்ரா தேவியை கைது செய்யவில்லை. தலைமறைவாக உள்ளதாக போலீசார் கணக்கு காட்டுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் பிணை மனு தாக்கல் செய்துள்ளனர். வரதட்சணை கொடுமை வழக்கு மட்டுமின்றி வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு உள்ள காரணங்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலீசாரின் புலன் விசாரணையில் இருப்பதால் அது முடிந்த பிறகு இது குறித்து விவரமாக வெளியிட முடியும் என தெரிவித்தனர். 

இதையும் படிங்க: ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவான இளைஞர்.. பாதியில் நிற்கும் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share