×
 

கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

ஆலய வளாகத்திற்குள் செல்போன்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறிய எம்எல்ஏ.

அரசு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட தவெக எம்எல்ஏ. சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து ஆலய வளாகத்தில் தவெக எம்எல்ஏ புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் சர்ச்சை. ஆலய வளாகத்திற்குள் செல்போன்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறிய எம்எல்ஏ.

தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கிய ஆலயங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கேமராவுடன் கூடிய செல்போன்களுக்கு அறநிலையத்துறை தடை விதித்தது. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பு மைய கவுண்டரில் கொடுத்து சாமி தரிசனம் முடித்து திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆலய வளாகத்திற்குள் செல்போன்களை கொண்டு செல்ல தடை விதிப்பதாக ஆலய வாயிலில் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதியான நேற்று முதல் 52 ஆலயங்களில் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாதவரம் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ விஜய்பிரபு ஆலய வளாகத்திற்குள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

தனது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம் எம்எல்ஏ விஜய்பிரபு சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்னர் அன்னதானம் வழங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் உத்தரவை மதிக்காமல் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரே சாமி தரிசனம் செய்த பின்னர் ஆலய வளாகத்திற்குள் புகைப்படம் எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருக்கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் அமைதியான வழிபாட்டுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்எனவும், திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பக்தர்களின் வழிபாட்டு அனுபவம் பாதிக்கப்படுகிறது எனவும், இதனைத் தவிர்க்கும் வகையிலும், திருக்கோயில்களின் பாரம்பரியத்தையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவதை பட்டம் வேண்டாம்; சம உரிமை கொடுங்கள்! சென்னை மாநகராட்சியில் 14வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share