×
 

அண்ணா பிறந்தநாளில் அமலுக்கு வரும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு!

அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களைக் கௌரவிக்கும் வகையில், முதலமைச்சர் தலைமையில் அறிவிக்கப்பட்ட 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்' பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரச் சேவைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தாய்மையின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் 2026 ஜூன் 22 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் எடையில் மொத்தம் 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) மூலம் கோரப்பட்ட இணையவழி ஒப்பந்தப்புள்ளியில் 11 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்துச் செய்கூலி, சேதாரம், காப்பீடு, போக்குவரத்து மற்றும் பி.ஐ.எஸ் (BIS) ஹால்மார்க் தரமுத்திரை உள்ளிட்ட அனைத்துக் கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து வெறும் ரூ.0.01 மட்டுமே என மிகக் குறைந்த விலைப் புள்ளியைக் கோரிய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி, இதே விலைக்கு வழங்க கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் ஒப்புக்கொண்டது.

இதையும் படிங்க: எம்.எல்.ஏ கார் நிதி வேண்டாம்; நெல் கொள்முதல் நிலையம் கட்டி தாருங்கள்! சௌமியா அன்புமணி கோரிக்கை!

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ஜூன் மாதம் முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான 1,28,499 தங்க மோதிரங்களை உடனடியாக வழங்குவதற்காக, ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதாச்சார அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share