×
 

#BREAKING ஆரம்பமே அதிரடி...!! - இவர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள்... இடைக்கால பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் அறிவிப்பு...!

இலங்கை தமிழர்களுக்கு630 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வீடுகள் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். 

தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு இடைக்​கால பட்​ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறது.  தலைமை செயலக சட்டமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், 2026-27ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். 20-ம் தேதி 2026-27-ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படவுள்ளன.

பிப்​ரவரி 20ம் தேதி வரை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதேபோல் இன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதனை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.  சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரவுள்​ள​தால், இந்த இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, மக்​களைக் கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது இடைக்கால பட்ஜெட்டில், இலங்கை தமிழர்களுக்கு 630 கோடி ரூபாயில் 10 ஆயிரத்து 469 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டதாகவும், எஞ்சிய 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்... கலைஞர், அண்ணா நினைவிடங்களில் அமைச்சர்கள் மரியாதை...!

தமிழர் பெருமையை பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகங்களை அமைத்துள்ளதாக தெரிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,  285 கோடி ரூபாய் செலவில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்றும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 
 

இதையும் படிங்க: AI டூ கீழடி… பேரவையில் திமுகவின் சாதனைகளை list போட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share