×
 

AI டூ கீழடி… பேரவையில் திமுகவின் சாதனைகளை list போட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு..!

சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்றும் நாடு போற்றும் நல்ல திட்டங்களை தந்தவர் முதல்வர் எனவும் குறிப்பிட்டார். நாட்டிலேயே இரட்டை இலக்க உயர் பொருளாதார வளர்ச்சி அடையும் வகையில் ஆட்சி நடைபெற்ற வருவதாக கூறினார். மகளிர், மழலைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் பயன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வறுமையை ஒழிக்கும் இறுதிப்பூரையும் தமிழ்நாடு முன்னெடுத்துள்ளதாக கூறினார். அறிவு சார் பொருளாதாரத்தில் இளைஞர்கள் சிறந்து விளங்கிட புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசியல் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கியிருக்கின்றன என்று கூறினார். வரவு செலவுத் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கலைஞர் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.

அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நீர் நிலம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை செய்திருப்பதாக கூறியுள்ளார். உலகை வெல்லும் இளைஞர்களை உருவாக்கிட நாம் வடிவமைத்த திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்று இருப்பதாகவும் மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை உள்ளிட்ட சவால்களுடன் பயணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு பேரறிவு சிலை என என பெயர் சூட்டியவர் முதல்வர் என்றும் சவால்கள் பலவற்றை சந்தித்தபோதும் அண்ணா, கலைஞரின் தொலைநோக்குப் பார்வைகள் நம்மை வழிநடத்துவதாகவும் கூறியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநில பாடலாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது என்றும் கூறினார். தந்தை பெரியாரின் நூல்கள் 21 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் பன்னாட்டு தனித்தமிழ் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டு மக்களின் வரவேற்பு பெற்று இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share