திமுக ஆதரவு போலீஸ் அதிகாரிகளுக்கு நெருக்கடி! காத்திருப்போர் பட்டியலில் வைக்க முடிவு! செக் வைக்கும் டிஜிபி!
தி.மு.க., ஆதரவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுகிறார் புதிய டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோட்!
தமிழக காவல்துறையில் புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள சந்தீப்ராய் ரத்தோட், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும் நோக்கில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 2021ல் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அக்கட்சியின் செல்வாக்கில் செயல்பட்டு வந்த சில உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த அதிகாரிகள், தி.மு.க. ஆதரவு உயர் அதிகாரிகளின் ரகசிய உத்தரவுகளை நிறைவேற்றி, மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வளமான பதவிகளைத் தக்கவைத்துக் கொண்ட இவர்கள், அதிகார வரம்பை மீறி மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
புதிய டி.ஜி.பி.யிடம் இது குறித்த புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தி.மு.க. ஆதரவு உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை யாரும் பின்பற்ற வேண்டாம் என மண்டல ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பர்?! யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்! இரவோடு இரவாக பொறுப்பேற்பு!
மேலும், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை களையெடுக்கும் முதல் கட்ட நடவடிக்கையாக, தி.மு.க. ஆதரவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கூடுதல் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களின் பட்டியலைத் தயாரித்து வருகிறார்.
இந்தப் பட்டியல் இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் நேரத்தில் போலீஸ் துறையை முழுமையாக நடுநிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் புதிய டி.ஜி.பி.,யின் இந்த அதிரடி முடிவு, தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, வரும் சட்டமன்றத் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமாலை ஆதரவாளர்கள் அதிருப்தியால் கோயல் கோவம்!!! தமிழக பாஜகவில் அதிகரிக்கும் கோஷ்டி பூசல்!!