கலைத்துறைக்குக் மகுடம் சூட்டும் தமிழ்நாடு அரசு! 2016-2022-ஆம் ஆண்டிற்கான மாநிலத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
2016 முதல் 2022 வரையிலான தமிழக அரசின் மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைத்துறை மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் நீண்ட காலக் காத்திருப்புக்குத் தமிழ்நாடு அரசு இன்று இனிப்பான முடிவை அறிவித்துள்ளது. கடந்த 2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலானச் சிறந்தத் தமிழ்த் திரைப்படங்களுக்கான மாநில அரசு விருதுகளையும், 2014 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலானச் சின்னத்திரை விருதுகளையும் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சமுதாயச் சிந்தனைகளுடன் கூடியத் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் வழங்கப்படும் இந்த உயரிய விருதுகளை, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். ஆண்டு வாரியாகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய முன்னணி நட்சத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
சிறந்த நடிகர்கள்: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, கார்த்தி, ஆர்யா, ஆர். பார்த்திபன் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் தங்களது தனித்துவமான நடிப்பிற்காகச் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: “முதலமைச்சரின் பேச்சில் பதற்றம்; சூரியன் ஏற்கெனவே மறைந்துவிட்டது!” - தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி முழக்கம்!
சிறந்த நடிகையர்: நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, சாய் பல்லவி, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதைப் பெறுகின்றனர்.
சிறந்த திரைப்படங்கள்: கருத்துச் செறிவுமிக்க மற்றும் கலைநயம் கொண்டப் படங்கள் வரிசையில், மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம் மற்றும் கார்கி ஆகிய திரைப்படங்கள் அந்தந்த ஆண்டுகளுக்கானச் சிறந்தத் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன
சின்னத்திரை விருதுகள்: திரைப்படங்களுக்கு இணையாகச் சின்னத்திரை கலைஞர்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2022 வரையிலானச் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த அறிவிப்பு தமிழ்த் திரைத்துறை மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருது பெறும் கலைஞர்களுக்குப் பல்வேறுத் தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: வதந்திகளை நம்பாதீர்! ஐயப்ப பக்தர்கள் விவகாரத்தை மொழி பிரச்சினையாக மாற்ற வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்!