டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் 2026: ஏப்ரல் 15-ல் நேர்காணல் தொடக்கம்!
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு; தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெறும் எனத் தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த டிசம்பர் மாதம் நடத்திய குரூப்-1 (Group-1) முதன்மைத் தேர்வின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த முடிவுகள், அரசுப் பணி கனவில் இருக்கும் இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள பரபரப்பான சூழலிலும், அரசுப் பணிகள் தொடர்பான இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களுக்கு வரும் ஏப்ரல் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நேர்காணல் (Interview) நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணைப் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!
நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ள தேர்வர்கள் தங்களது அசல் சான்றிதழ்களைச் சரிபார்ப்பிற்குத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது குறித்த தகவல்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.
இதையும் படிங்க: விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!