×
 

அனைத்திலும் இந்தி திணிப்பு...! பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்... - டி.ஆர்.பாலு திட்டவட்டம்..!

பாஜகவையும், அதிமுகவையும் வீழ்த்த வேண்டும் என்று திமுக பொருளாளர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது, வேலைநாட்களை குறைப்பது ஆகியவற்றை பாஜக செய்வதாக கூறப்படுகிறது .

பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்தது.

100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: இருட்டில் மூழ்கடிக்கும் திமுக அரசு... கல்லா கட்ட இது ஒரு வழியா?.. நயினார் கண்டனம்..!

ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு திமுக பொருளாளர் டி. ஆர். பாலு kandana உரையாற்றினார். மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களிலும் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மக்களுக்கு விரோதமான சட்டங்களையும், திட்டங்களையும் செயல்படுத்தும் பா.ஜ.க அரசையும், அவர்களுக்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் வீழ்த்த வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு மஞ்சள் கிழங்கையும் சேர்த்து குடுங்க... முதல்வருக்கு நயினார் வலியுறுத்தல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share