×
 

சுதந்திர தின விழா: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய சாலைகளில் கட்டுப்பாடு..!!

பொதுமக்கள் இந்த ஏற்பாடுகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமைச் செயலகம் மற்றும் கோட்டை வளாகம் அருகே கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் வசதியாகச் செல்லும் வகையில் மாற்று வழிகள் மற்றும் வாகன அனுமதி அட்டைகளின் அடிப்படையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

உழைப்பாளர் சிலையிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் வாகன அனுமதி அட்டை பெற்றவர்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதிகளில் சாதாரண போக்குவரத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.

காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை – அண்ணா சாலை – முத்துசாமி பாலம் – முத்துசாமி சாலை – ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு – வடக்கு கோட்டை பக்க சாலை வழியாகச் செல்லலாம். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை – தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாரிஸ் கார்னர் – வடக்கு கோட்டை பக்க சாலை – ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு – முத்துசாமி சாலை – முத்துசாமி பாலம் – அண்ணா சாலை – வாலாஜா சாலை வழியாகச் சென்றடையலாம்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் கனமழை: அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்!

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம் – முத்துசாமி சாலை – ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு – வடக்கு கோட்டை பக்க சாலை வழியாகச் செல்லலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை – வாலாஜா சாலை வழியாகச் சென்றடையலாம். 

சிவப்பு மற்றும் பர்ப்பிள் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாகச் சென்று தலைமைச் செயலக உள்வாயிலருகே இறங்கி, வாகனங்களை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். 8.30 மணிக்குப் பிறகு அவர்கள் போர் நினைவுச் சின்னம் – கொடிமரச்சாலை – முத்துசாமி பாலம் – முத்துசாமி ரோடு – வடக்கு கோட்டை பக்க சாலை – பாரிமுனை சந்திப்பு – ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகச் சென்று வெளிவாயிலருகே இறங்கி, தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.

நீல மற்றும் பிங்க் வண்ண அட்டை வைத்திருப்போர் 8.30 மணி வரை ராஜாஜி சாலை – போர் நினைவுச் சின்னம் – கொடிமரச்சாலை – முத்துசாமி பாலம் – முத்துசாமி சாலை – வடக்கு கோட்டை பக்க சாலை – பாரிமுனை – ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகச் சென்று வெளிவாயிலருகே இறங்கலாம். அதற்குப் பிறகு காமராஜர் சாலை – உழைப்பாளர் சிலை – வாலாஜா சாலை – அண்ணா சாலை – முத்துசாமி பாலம் – வடக்கு கோட்டை பக்க சாலை – பாரிமுனை – ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாகச் செல்ல வேண்டும். அவர்களும் PWD நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.

அனுமதி அட்டை இல்லாதவர்கள் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகே இறங்கி, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும். பொதுமக்கள் இந்த ஏற்பாடுகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சுதந்திர தின விழாவின்போது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு: காலியிடங்கள் 9 ஆகக் குறைந்தது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share