திருச்சியில் அதிபயங்கரம்... மது ஊற்றிக் கொடுத்து 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை...!
மது ஊற்றி கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை என்ற தகவல் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
திருச்சி மாநகர் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 சிறுமி அவருடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அப்பகுதியில் அவருடைய தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்து செல்வதற்காக மாரி செல்வன் என்கிற கார் ஓட்டுனர் வந்துள்ளார். இந்த நிலையில் மாரி செல்வன் 14 வயது சிறுமியை தனியாக பேசி அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுமி காந்தி மார்க்கெட்டை அடுத்து கீரைக்கடை பகுதியில் மதுபோதையில் சுயநினைவிழந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் அந்த சிறுமியை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே அந்த சிறுமியின் உறைவினர்கள் இது குறித்து அப்பகுதியில் விசாரித்ததில், கார் ஓட்டுநர் மாரி செல்வன் சிறுமியை அழைத்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என குற்றம் சாட்டி, சிறுமியின் உறவினர்கள் மாரி செல்வனை சரமாறியாக தாக்கியுள்ளனர்.
இதில் மாரி செல்வன் வந்து படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்து காந்தி மார்க்கெட் போலீசார், மாரி செல்வனை மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியை பாலியல் ரீதியாக மாரிச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் துன்புறுத்தி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமையில் குவிந்த சிறுமியின் உறவினர்கள், பொதுமக்கள் காந்தி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வந்து கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் உச்சக்கட்ட கொடூரம்... மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை நாசம் செய்த வட மாநிலத்தவர்கள்...!
கார் ஓட்டுநர் மாரி செல்வன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பா வந்து திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் மலைக்கோட்டை பகுதியில வந்து அதிகமாக வந்து கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதால், போதை ஆசாமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இரவில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் அவலம்... வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை...!