×
 

வெள்ளை அறிக்கை இல்ல.. வெளுத்துப்போன அறிக்கை.. விளாசிய TTV தினகரன்..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து டி டி வி தினகரன் விமர்சனம் செய்தார்.

தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே என அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தெரிவித்தார். தமிழக அரசின் நிதிநிலை குறித்து "வெள்ளை அறிக்கை" வெளியிடுகிறோம் என்ற பெயரில், தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டிருப்பது புதிய உண்மைகளையோ, புதிய தீர்வுகளையோ கொண்ட ஆவணம் அல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்திருப்பது, இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வளர்ச்சி மந்தமடைந்திருப்பது போன்ற தமிழக மக்கள் ஏற்கனவே நன்கு அறிந்துள்ள உண்மைகளுக்கு புதிய அட்டை போட்டு மீண்டும் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரிசெய்யப் போகிறார்கள், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன, வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்துள்ளது என்றும் விமர்சித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுடன் இணையும் அமமுக..? நடக்கப்போவது என்ன..? டிடிவி தினகரன் பேட்டி..!

தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? தவெக ஆட்சியில் மாநிலத்தின் நிதிநிலையைச் சீரமைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன? வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான செயல் திட்டங்கள் என்ன? மாநிலத்தின் சொந்த வருவாயைப் பெருக்க என்ன புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன? என்று செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் அளித்த ஒரே பதில் "it will take some time" தான் எனவும் கூறினார்.

 தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல. ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன உண்மைகளையே புதிய அட்டையில் வெளியிட்டிருக்கும் அறிக்கை என்றும் கூறினார். 

இதையும் படிங்க: மேட்டூர் திறப்பில் சிக்கல்.. குறுவை விவசாயம் ஆபத்தில்..!! தவெக அரசை எச்சரித்த டிடிவி தினகரன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share