×
 

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்கள்... தென் தமிழக வளர்ச்சிக்கு புதியதொரு அடித்தளம்... முதல்வர் பெருமிதம்!

தூத்துக்குடியில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி, தனது இயற்கை துறைமுக வசதிகளுக்காக ஏற்கனவே பிரபலமான நகரம். இப்போது, இந்த நகரம் உலகளாவிய கப்பல் கட்டும் துறையின் மையமாக உருவெடுக்கும் வகையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக, 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுடன் இரண்டு உலகத் தரமான கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது வெறும் உள்கட்டமைப்பு திட்டமாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு வரலாற்று முடிவாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம், தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அறிவிப்பின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த முதலீட்டின் பின்னணியில், தமிழ்நாடு அரசின் தொழில் ஈர்த்தல் முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சியில், இரண்டு அல்ட்ரா மெகா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை, கப்பல் கட்டும் துறையின் முன்னணி நிறுவனங்களான கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் மற்றும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் போின்று கொண்டவை. கொச்சின் ஷிப்யார்ட், 15,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ஒரு உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவுகிறது. இதன் மூலம், முதல் கட்டத்தில் 4,000 நேரடி வேலைகள் மற்றும் 6,000 மறைமுக வேலைகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும். அதேபோல், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், மற்றொரு 15,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் இரண்டாவது தளத்தை அமைக்கிறது, இது 5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக வேலைகள் உள்ளிட்ட 45,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்கும். இவை இரண்டும் சேர்ந்து மொத்தம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! உடல் கருகி ஒருவர் பலியான சோகம்...

தூத்துக்குடியில் அமைய உள்ள இரண்டு கப்பல் கட்டும் தொடர்பான அறிவிப்பை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை இதை எடுத்துக் கூறுவதாக அமையும் என்று கூறினார். இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: #BREAKING: உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை... பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share