×
 

கரூர் கோரச் சம்பவம்... அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள்... இனிமே இவர் தான் விசாரிக்க போறாராம்...!

கரூர் கோரச்சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது.

மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சமும், விஜய் தரப்பில் 20 லட்சமும், மத்திய அரசு தரப்பில் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். 2வது நாளாக அவர் விசாரணையை நடத்தி வருகிறார். 

இதையும் படிங்க: என் தாயின் மரண வலி மீண்டும் என் மீது பாய்ந்தது... மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா...!

இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். முன்னதாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: #BREAKING: கரூரில் உண்மையில் நடந்தது என்ன? விசாரணையை தொடங்கிய தனிநபர் ஆணையம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share