விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!
பெரம்பூரில் விஜய் பரப்புரை நடத்திய போது அத்துமீறியதாக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியிலேயே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார். இரண்டு நிமிடங்களில் தனது உரையை போலீசாரின் அறிவுரையை ஏற்று முடித்துக் கொண்டார். அதிகளவிலான கூட்டம் கூடியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் விஜயின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் பரப்புரையின்போது அத்துமீறியதாக கோரி தமிழக வெற்றி கழகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் விஜயின் பரப்புரையின்போது மருத்துவமனை சென்றவர், ஆட்டோ ஓட்டுநர், தனியார் நிறுவன ஊழியருக்கு வழி விடாமல் அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் தவெகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி ... தவெக தலைவர் மீது பாய்ந்தது 5 வழக்குகள்... இரண்டே நிமிடத்தில் தலைகீழாக மாறிய களம்...!!
பள்ளி மாணவ,மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை ஆபாசமாக திட்டிய தவெக மாவட்டச் செயலாளர் சிவா, நிர்வாகி சவுந்தரராஜன் உள்ளிட்டோர் மீது MKB நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: “கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!